பெண் நிழலின் நிஜங்கள்
- 2 hours ago
- 1 min read
அணைத்துக்கொள் — ஜானு நமக்குக் கற்றுத் தந்தது அதுதான். உண்மையில் நாம் என்ன அணைத்துக்கொள்கிறோம்? அது ஒரே ஒரு விஷயமா, அணைக்க வேண்டியது? அல்லது ஐன்ஸ்டீன் சொல்வது போல் ஒரு அலையா?
அணைப்பு என்பது வெறும் தழுவலா? அல்லது ஒரு உணர்வு பிறக்கும்போது நம்மைச் சூழ்ந்துகொள்ளும் ஏதோ ஒன்றா? அணைப்புக்கு பெண்மையான வழியும், ஆண்மையான வழியும் உண்டா?
பெண்மையை கவர்ச்சி, கருணை, தாய்மை என்று மட்டும் வரையறுக்க முடியுமா? ஆண்மையை அதற்கு நேர் எதிராகவா? அல்லது இன்னும் அதிக நிழல்கள் இருக்கின்றனவா?
பயம், கட்டுப்பாடு, ஆபத்தைத் தவிர்த்தல் — இது பெண்மையா, அல்லது (மனித)னின் வரையறையா/தேவையா? ஒருவேளை பெண்மை எல்லைகளுக்குப் பயப்படுவதில்லை. ஒருவேளை அதுவே எல்லைகளை உருவாக்குகிறது. சுவர்களாக அல்ல...
மாறாக அழைப்புகளாக. அது விதியையும் விதி மீறுபவரையும் ஒருசேர வாழவைக்கும் திறன் கொண்டது போல் தெரிகிறது. அது எல்லையை மதிக்கிறது, எல்லையைக் கடக்கத் தகுதியான அரிய ஆன்மாவை அணைத்துக்கொள்கிறது.
நாம் அணைத்துக்கொள்ளாதபோது என்ன நடக்கிறது? சிக்கலைப் போற்றாமல், அதைக் கட்டுப்படுத்த விதிகள் எழுதத் தொடங்கும்போது? விதிகள் மனிதத்தன்மையின் மொத்தமும் இல்லை. உண்மையான ஆண்மை நிழல்களை ரசிக்கிறது. நிழல்களைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்?
Sena Speaks: It has to be shades

